Thursday 26 September 2013

வழியனுப்புதல் சுலபமில்லை

உங்களைப் போல்
எனக்கு
சுலபமாக இருப்பதில்லை
வழியனுப்பிவைத்தல்

கையசைத்து
இதழ் விரித்து
பல்காட்டி
வழியனுப்பிவைக்கும்
வழமையில்
எனக்கு உடன்பாடில்லை

குறைந்தபட்சம்
ஆழ்மனதைத்தொடும்
ஒரு முத்தமிடவேண்டும்

உள்ளங்கை பற்றி
ஒவ்வொரு ரேகையாய்
தடவிக்கொடுக்க வேண்டும்

பிசகற்ற அன்போடு
தோள்சேர்த்து
ஸ்பரிசிக்கவேண்டும்

பொய்மையற்ற
புன்னகையொன்றை
வழிச்செலவுக்குப் பகிர வேண்டும்

மிச்சமிருக்கும்
சொற்களனைத்தையும்
பேச்சுத்துணைக்கு
ஒரு கைப்பையில் நிரப்பி
ரயிலேற்ற  வேண்டும்

திடுமென
வெறுமை படர்ந்த
ரயில்  கிளம்பிய
நடைமேடையில்
வேர்பிடிக்க அமர்ந்தபடி
சொட்டுச் சொட்டாய்
புன்கணீர் உகுக்கவேண்டும்
.
.
.
உங்களைப் போல்
எனக்கு
சுலபமாக இருப்பதில்லை
வழியனுப்பிவைத்தல்

~~க.உதயகுமார்

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5358

2 comments:

  1. ஒவ்வொரு வரியும் நிஜமாய் மனதில் புகுந்தது......

    உங்க தளத்துல கமன்ட் போட கஷ்டமா இருக்கு
    settings -> posts and comments -> Show word verification -> no குடுங்க

    ReplyDelete
    Replies
    1. காயத்ரி ...நீங்கள் சொன்ன மாற்றத்தை செய்திருக்கிறேன் ...நான் வலைப்பூ ஆரம்பித்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது ..இங்கு நிறைய settings விஷயங்கள் எனக்கு புரியவில்லை .

      பின்னூட்டத்திற்கு நன்றி காயத்ரி !!!

      Delete